Friday, May 29, 2026 2:29 pm
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில் , மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் , வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ ‘ முன்பாக இன்றைய தினம் (29) காலை ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சமூக ஆர்வலர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

