Monday, May 18, 2026 12:43 pm
கொட்டகலை – பாத்தியாபுரம் பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் , வாழை மரத்தின் தண்டுப் பகுதிக்கு நடுவிலிருந்து வாழைக்குலை ஒன்று வெளிவந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வாழை மரத்தின் உச்சிப் பகுதியிலேயே வாழைக்குலை தோன்றுவது வழக்கம். ஆனால், இந்த மரத்தின் நடுப்பகுதியில் , இரு தண்டுகளுக்கு இடையில் இருந்து வாழைக்குலை வெளிவந்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த அதிசயப் பின்னணியைக் கொண்ட வாழைமரத்தை அப்பகுதி மக்கள் பலரும் ஆர்வத்துடன் நேரில் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

