Saturday, May 16, 2026 9:30 am
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய்த் தொற்று பரவியதில் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
உகாண்டா . தெற்கு சூடானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும், மோதல் பாதிப்புக்குள்ளான இடுரி மாகாணத்தில் இதுவரை 246 பேருக்கு ரத்தக் கசிவு காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .
நோய்ப் பரவலை உகாண்டாவின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியதாகவும், காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து பயணம் செய்த 59 வயதுடைய நபர் ஒருவர் கம்பாலா மருத்துவமனையில் அந்த நோயால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
நோய் மேலும் பரவும் அபாயம் குறித்து கவலைப்படுவதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு , தடுப்பு மையத்தின் (ஆப்பிரிக்க சிடிசி) அதிகாரிகள், தெரிவித்தனர். இடுரி மாகாணத்தில் உள்ள சுரங்க நகரங்களில் மக்கள் தொடர்ந்து வந்து செல்வதால், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
1976ல் எபோலா வைரஸ் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 16 முறை எபோலா பரவல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, இது ஜைர் வகை எபோலாவாகவே இருந்துள்ளது, இதற்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இருப்பினும், பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் புண்டிபுக்யோ வகையைச் சேர்ந்தவை என்றும், இதற்கு உரிமம் பெற்ற தடுப்பூசி எதுவும் இல்லை என்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் . இதற்கு முன்னர் 2007 2012-ல் புண்டிபுக்யோ வைரஸின் இரண்டு பரவல்கள் ஏற்பட்டுள்ளன.

