Monday, May 11, 2026 12:00 pm
கெக்கிராவ , கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஆவார்.
குறித்த நபர் மேலும் ஐந்து பேருடன் கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டிச் சென்றபோது , படகு கவிழ்ந்ததில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

