Friday, May 8, 2026 8:18 pm
தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. தவெக 107, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. இதுபோக விசிகவும் ஆதரவு கொடுத்திருப்பதால் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்திருக்கிறது.
இதையடுத்து தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து தனக்கு போதுமான ஆதரவு கிடைத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்கக்ப்படுகிறது.
நாளை விஜய் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

