Tuesday, May 5, 2026 11:24 am
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் காக்கைதீவில் இன்று செவ்வாய்க்கிழமை (05) விஜய் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினர்.
இதன் போது வறிய மக்களுக்கு அரிசி பொதிகளும் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் போல விஜயும் மக்களுக்கு உதவி செய்வார், என தெரிவித்த ஆதரவாளர்கள் அவரை போல தாமும் செய்வதாக தெரிவித்தனர்.



