Tuesday, May 5, 2026 11:05 am
அனுமதிப்பத்திரமின்றி, முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற நபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை மீசாலை பகுதியில் குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முற்பட்ட வேளை, சாரதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தியை கைவிட்டு தப்பிச்சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.




