Friday, May 1, 2026 8:53 pm
தற்போது கோடை காலம் என்பதால் கடும் வெயில் நிலவி வருகிறது. அதுவும் மே மாதம் முதல் வாரத்தில் வெய்லின் தாக்கம் இன்னமும் அதிகரிக்கும். இப்போதே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர முடியவில்லை. வெயில் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் சூப்பர் எல் நினோ நிலம் ஒன்று வருகிற ஒக்டோபர் மாதம் உருவாகவுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை செய்திருக்கிறார். பசிபிக் பெருங்கடலின் மத்திய ,கிழக்கு பகுதியில் கடல் நீர் வெப்பநிலை வழக்கத்தை விட >2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதே இந்த அரிதான நிகழ்வு ஆகும்.
1876 ம் வருடத்திற்கு பின் வலுவான சூப்பர் எல் நினோ வருகிற ஒக்டோபர் மாதம் உருவாகும் எனவும் அதன் காரணமாக 2027 ஆம் வருடம் உலகின் சராசரி வெப்பநிலை 1.65 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதுடன் அதீத வெப்பம் அலைகள், வறட்சி, பெருமழை நிகழ்வுகளை 2027ம் வருடம் உலகம் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

