Friday, May 1, 2026 1:34 pm
தற்போதைய அரசாங்கமானது மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு மக்கள் அரசாங்கம் எனவும், ஒரு சில சிறிய குழுக்களின் கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” என்னும் தொனிப்பொருளில் நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது இந்நாட்டு மக்களே. மக்களின் பலமான நம்பிக்கையினாலேயே அரசாங்கம் இன்றும் ஸ்திரமாக உள்ளது. அரசாங்கம் மக்களின் நம்பிக்கையுடன் பலமாக இருப்பதோடு, மக்களின் நலனுக்காகவே தொடர்ந்தும் செயற்படும்.
அரசாங்கத்தை விரட்ட எண்ணும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தாலும் கூட அரைப்பங்கு மக்களையேனும் அவர்களால் திரட்ட முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

