Wednesday, April 29, 2026 2:07 pm
போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்காததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்துடைத்த மகனின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கேகாலை – தேவலகம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(26.04.2026) அன்று இடம்பெற்றுள்ளது.
அப் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் 5000 ரூபா கேட்ட போது, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தாய் கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞன், அருகில் கிடந்த தடியால் தாயின் இரு கால்களையும் தாக்கியுள்ளார். வலியால் துடித்த தாயை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததில், தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த இளைஞன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப் பிடிக்க தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

