Monday, April 27, 2026 9:09 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன், தான் 31 ஆண்டுகளாக விடுதலைக்காகவும் நீதிக்காகவும் போராடிய சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறைப்படி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், தனது விடுதலைக்காகவும் நீதி கிடைக்க வேண்டியும் 31 ஆண்டுகள் போராடினார்.அவரது தாய் அற்புதம்மாளும் வயதான காலத்தில் தனது மகனின் விடுதலைக்காக கோர்டு படிகளில் பலமுறை ஏறி இறங்கினார். சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்குகள் நடந்தன. இந்த நிலையில் எந்த நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் விடுதலைக்காக ஏறி இறங்கினாரோ, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். ஆம் தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் அவர் முறைப்படி பதிவு செய்து கொண்டார்.

