Friday, April 24, 2026 2:22 pm
சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னரே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இவர் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசரீதியான ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இச்சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்ததுடன் எதிர்க்கட்சியினரால் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் பிரதமர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
‘ஏதிர்கட்சியானதுஅரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் மாற்று அரசியல் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் முக்கியமானது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி அதைத்தான் செய்கிறதா என்பதை மக்களே சிந்திக்க வேண்டும் ‘என மேலும் தெரிவித்தார்.

