Friday, April 24, 2026 3:24 pm
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவர் பொலிஸாராலும் தீயணைப்புப் படையினராலும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் இன்று கோபுரத்தின் உச்சியில் ஏறியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் கோபுரத்திற்குக் கீழே காற்றினால் நிரப்பப்பட்ட பாதுகாப்பு மெத்தையை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காணொளி காட்சிகளின்படி அந்த நபர் திடீரென கீழே விழுந்த போது கீழே விரித்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மெத்தை இருந்ததால் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
குறித்த நபர் எதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

