Thursday, April 23, 2026 4:18 pm
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிப்பதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என குற்றஞ்சாட்டி பாதுகாப்பு பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிக நேரமாக காத்திருந்தும் பேருந்து வசதிகள் கிடைக்கவில்லை என்றும் சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் ஏற்றாது செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே பகுதியால் பயணம் செய்த நடிகர் சரத்குமார் பொதுமக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் அங்கிருந்த பாதுகாப்பு பொலிஸாருடன் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


