Saturday, April 11, 2026 9:05 pm
தவெக தலைவர் விஜய் தொடர்ந்து தனது பிரசாரங்களை இரத்து செய்து வருவது தவெக தொண்டர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது..
ஆனால் விஜய் இதுவரை திருச்சி, சென்னை பெரம்பூர், புதுச்சேரி, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்திருக்கிறார். பொலிஸார் விஜயின் பரப்பரைக்கு அனுமதி மறுக்கிறார்கள், அல்லது சம்பந்தப்பட்ட இடத்திற்கு மிகவும் தாமதமாக செல்வதால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, அல்லது விஜயே பாதுகாப்பு காரணம் கருதி பிரச்சாரத்தை இரத்து செய்கிறார். இதில் ஏதேனும் ஒன்று தொடர்ந்து நடக்கிறது.
ஏற்கனவே சென்னை கொளத்தூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அண்ணா நகர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல் தூத்துக்குடியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரசாரத்தை இரத்து செய்துவிட்டு பேசாமலேயே சென்று விட்டார்.
அதேபோல் காரைக்குடியில் தாமதமாக சென்றதால் விஜய் அங்கு பிரச்சாரம் செய்யவில்லை..
கடந்த 9ம் திகதி அவர் கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய அதை இரத்து செய்தார்.. அதன்பின் 11ஆம் திகதியான இன்று அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டும் அவர் கடலூர் பகுதிக்கு பிரச்சாரம் செய்யாமல் இரத்து செய்தார்.
வருகிற 13-ஆம் திகதி கும்மிடிப்பூண்டியில் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசாரமும் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பொலிஸும், தேர்தல் கமிஷனும் அனுமதி கொடுத்தும் தொடர்ந்து விஜயை பிரசாரத்தை ரத்து செய்து வருவது அவரின் ஆதவாளர்களுக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், விஜய் ஏன் பிரசாரத்தை இரத்து செய்கிறார் என்பதற்கு சரியான காரணத்தை விஜய் தரப்பு தவெக நிர்வாகிகளிடமும் சொல்வதில்லையாம்.

