Wednesday, April 8, 2026 5:10 pm
தமிழகம்,கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் 23ம் திகதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தேர்தல் வந்துவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வெளியாகும். பல அமைப்புகளும் கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. . அதில் பெரும்பாலும் திமுக ஆட்சியை பிடிக்கும் எனவும் இரண்டாம் இடத்திற்கு அதிமுக வரும் எனவும் மூன்றாம் இடத்தில் தவெக இருக்கும் என சொல்லுகிறார்கள்.
குறிப்பாக விஜயின் தவெக 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கும் எனவும், 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் சில கருத்துக்கணிப்புகள் சொன்னது. இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 9ம் திகதி முதல் 29ம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.

