Wednesday, April 8, 2026 4:59 pm
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி , ஒப்புதல் அளித்துள்ளார்.
, ஈரானிய ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது போரின் முடிவு அல்ல என்றும், ஈரான் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் அமெரிக்கா , இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த போர் தொடங்கியது. 39 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இருதரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது ஈரான் முன்வைத்துள்ள 10 அம்சத் திட்டத்தில் , ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தை அங்கீகரிப்பது, பிராந்தியத்திலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது, ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவது,போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிபந்தனைகள் ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போரை நிரந்தரமாக நிறுத்த ஈரான் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

