Tuesday, April 7, 2026 2:45 pm
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது.
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த நபருடையது எனச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அது தொடர்பில் தெரிவித்து சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

