Monday, April 6, 2026 4:23 pm
யாழ்ப்பாணம் தொண்டைமனாறு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த வீடு சேதமடைந்துள்ளது.
இன்று காலை குறித்த பகுதியில் மழையுடன் கூடிய மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் போது வீட்டின் அறையொன்றினுள் மின்னல் தாக்கம் ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட்டள்ளது. மேலும் அருகிலிருந்த தென்னை மரத்தின் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் உயிரிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


