Saturday, April 4, 2026 8:44 pm
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதாக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.
திருமாளவன் சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். அதோடு இந்த காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏவாக விசிகவின் சிந்தனை செல்வன் உள்ளார். அவருக்கு பதில் திருமாவளவன் களமிறங்குவதாக தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யாத திருமா திருமாவளவனின் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக எப்போதும் அறிவிக்கவில்லை. திடீரென்று அவர் தன்னை தானே வேட்பாளராக அறிவித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் திருமாவளவனின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அவர் இன்னும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் நாளை மறுநாளுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கலுக்கு நாளை மறுநாள் மட்டுமே உள்ளது.விலகுவதாக அறிவித்த திருமாவளவன் இப்படியான சூழலில் தான் விசிகவின் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் இருந்து பின்வாங்குவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் இன்று மாலையில் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது காட்டுமன்னார் கோவில் தொகுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

