Friday, April 3, 2026 2:36 pm
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் , திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு
தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். முதலாவதாக சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் திருச்சிக்கு சென்ற விஜய் அங்கு வேட்டுமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில்தான் விஜயின் வேட்புமனு தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில் விஜய் தன் மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்.. ஆனால் திருச்சியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு இரண்டு வழக்கு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது பெரம்பூர் பரப்புரையின் போது பதியப்பட்ட வழக்கும், 2025 ஓகஸ்ட் மாதத்தில் மதுரையில் நடந்த மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் தனக்கு வழக்கு இல்லை எனவும் ஒரு தொகுதியில் தனக்கு இரண்டு வழக்குகள் இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.
அதேநேரம் இதற்கு தீர்வும் இருக்கிறது. ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் நான்கு செட் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். பெரம்பூரில் விஜய் இதுவரை இரண்டு செட் மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்.. மீதமுள்ள இரண்டு செட் மனுக்களில் தனக்குள்ள 2 வழக்கு விபரங்களை குறிப்பிட்டு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்தால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

