Friday, April 3, 2026 2:04 pm
யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவிசாளரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த பரிசோதனை நடவடிக்கை நேற்று இரவு மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றாத பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நான்கு வாகனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தொடரும் என தவிசாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


