Friday, March 27, 2026 4:31 pm
சவூதி அரேபியாவில் டிராக்டர் எஃப்சி அணியின் திட்டமிடப்பட்ட உதைபந்தாட்டப் போட்டிக்கு முன்னதாக, “பகைமையானவை” எனக் கருதும் நாடுகளுக்குத் தனது விளையாட்டு அணிகள் பயணம் செய்வதற்கு ஈரான் தடை விதித்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.
தெஹ்ரானில் உள்ள ஈரானின் விளையாட்டு அமைச்சு அறிவித்த தடை உத்தரவில், அமெரிக்கா, கனடா ,மெக்சிகோவில் ஜூன் 11 அன்று தொடங்கும் உலகக் கிண்ண உதைப்ந்தாட்டப் போட்டி குறிப்பிடப்படவில்லை.
சவூதி அரேபியாவில் நடைபெறவிருந்த, துபாயின் ஷபாப் அல் அஹ்லி அணிக்கு எதிரான டிராக்டர் அணியின் ஆட்டத்தை அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பாகக் குறிப்பிட்டது. இது ஆசிய சம்பியன்ஸ் லீக் எலைட் தொடரின் ஒரு பிளேஆஃப் ஆட்டமாகும் . ஈரானிய விளையாட்டு வீரர்கள்,அணி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத நாடுகளில், தேசிய மற்றும் கிளப் அணிகள் இருப்பது மறு அறிவிப்பு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது,” என்று அது கூறியது.
ஈரான் போர் இப்பகுதியைப் பாதித்துள்ளது, மத்திய கிழக்கில் உள்ள ஏறக்குறைய ஒவ்வொரு நாடும் ஏவுகணைத் தாக்குதல்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல்லது சிதறல்களால் சேதமடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மேற்கு மண்டல பிளேஆஃப் போட்டிகள், ஏப்ரல் 13௧4 திகதிகளில் ஜித்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, காலிறுதிப் போட்டிகளுக்கான அணிகளைத் தீர்மானிக்க ஆசிய கால்பந்து கூட்டமைப்பு புதன்கிழமை நடத்திய குலுக்கலின் விளைவாக, சவூதி அரேபியாவில் டிராக்டர் அணியின் பிளேஆஃப் ஆட்டம் நடைபெற்றது .
போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக, இந்த விஷயம் குறித்து ஆசிய உதைபந்தாட்ட கூட்டமைப்புக்குத் தெரிவிக்கும் பொறுப்பு உதைபந்தாட்ட கூட்டமைப்பு கழகங்களுக்கு உண்டு என்று ஈரான் அமைச்சு கூறியது.

