Wednesday, March 25, 2026 4:17 pm
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலை தொடர்ந்து இலங்கை பூர்வீகத்தை கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவி பொறுப்புகளை கடந்த திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் சாதனை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டதன் ஊடாக தனது 25 வது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

