Thursday, March 19, 2026 2:31 pm
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
திகதி ஒற்றை எண்ணாக இருந்தால் அன்றைய தினம், வாகன எண் தகட்டின் கடைசி ஒலக்கம் ஒற்றை எண் உள்ளவர்கள் மாத்திரமே எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இரட்டை தினம் உள்ள நாட்களில் வாகன எண் தகட்டின் கடைசி ஒலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது பூச்சியமாகவோ (0) இருந்தால் மாத்திரமே எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கமைய இன்று ஒற்றை எண் (1, 3, 5, 7, 9) உள்ளவர்கள் மட்டுமே எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். கட்டாயமாக, உங்களிடம் ஏதேனும் ஒரு வழியில் QR குறியீடு இருக்க வேண்டும்.
நாளை (20) இரட்டை இலக்கம் அல்லது பூச்சியத்தில் (0) முடியும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.

