Thursday, March 12, 2026 10:52 am
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி பருத்தித்துறை, கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு, மனைவியின் தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே மாமனாரை படுகாயப்படுத்திவிட்டு மாமியாரை படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

