Friday, March 6, 2026 12:12 pm
இலங்கை மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடும் நோக்கில் மார்ச் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. உலக சுகாதார நிறுவன பரிந்துரையின் படி ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த கணக்கெடுப்புகள் நடைபெறுகின்றன.
2026 மார்ச் முதல் நவம்பர் வரை நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள், முதியோர் மற்றும் பல்வேறு வயதினரிடமிருந்து தரவுகள் திரட்டப்படும்.
பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு இணைந்து விசேட கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.

