Thursday, March 5, 2026 12:55 pm
மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காகக் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் தனது அனுதாபச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

