Monday, March 2, 2026 4:02 pm
கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 28ம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

