Wednesday, February 25, 2026 1:42 pm
அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி கைஷானந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக இந்த குழுவினர் கீரிமலை நகுலேஸ்வரத்தினை வந்தடைந்தனர். இதன்போது கீரிமலை தீர்த்தக்கரையினையும் ஆலயத்தினையும் சுற்றி பார்வையிட்டனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் பூசாரிகள் உடன் இருந்தனர்.

இந்திய சிவ பக்தர்களை இலங்கையின் புனித மரபுகளை தரிசிக்க ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகள் வலுப்படுவதுடன், இலங்கையின் ஆன்மீக மரபுகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்த குறித்த விஜயம் அமைந்திருந்தது.

