Wednesday, February 25, 2026 1:02 pm
2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 45-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பாக ஆடி அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய லியாம் டாசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
தனி ஒருவனாகப் போராடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

