Tuesday, February 24, 2026 4:02 pm
இந்த வருடத்தில் இதுவரை 44 காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு, சட்டவிரோத மின்சார வேலிகள் அமைத்தல், புகையிரத விபத்துகள், விஷம் உடலுக்குள் ஊடுருவல் மற்றும் நீரில் மூழ்குதல் ஆகியவற்றால் இந்த யானை மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த காலப்பகுதிக்குள் காட்டு யானைத் தாக்குதல்களால் 10 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

