Friday, February 20, 2026 11:44 am
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை இன்று இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

