Tuesday, February 17, 2026 12:03 pm
அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள படுவெக்கெட் நகரில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் பாடசாலை ஹொக்கிப் போட்டியின் போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 2 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் குடும்பப் பிரச்சினைக் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

