Monday, February 16, 2026 4:06 pm
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
பெப்ரவரி 14 அன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில் இன்று 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.
தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,688 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலராகப் பதிவாகியுள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராகப் பதிவாகியுள்ளது.

