Friday, February 13, 2026 11:09 am
அட்டாளைச்சேனை – தைக்காநகரில் அமைந்துள்ள கால்நடை அறுவைத் தளம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது அக்கட்டடத்தின் மேற்கூரை ,கதவுகள் ஆகியன முற்றுமுழுதாக சேதமடைந்தள்ளன. அந்தக் கட்டடம் கடற்கரையை அண்மித்து இருப்பதால் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துள்ளன.
இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் அமையப்பெற்ற இக்கட்டிடத்தில் சிறுவர் பூங்கா அல்லது வாசிகசாலை அல்லது கூட்ட மண்டபம் போன்ற தேவைகளுக்காக அதனை மாற்றியமைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் , வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.றியாஸ் ஆகியோரிடன் அப்பகுதி மக்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.
பிரதேச சபை தவிசாளர் ,உறுப்பினர், ஆகியோர் கட்டடத்தைச் சென்று பார்வையிட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கைக்கமைவாக அதனை மாற்றியமைக்க தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் சபையின் அனுமதியைப் பெற்று அதுதொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

