Wednesday, February 11, 2026 2:54 pm
சோமாலியாவில் 55 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஆழமற்ற நீரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
செவ்வாய்க்கிழமை காலை மொகடிஷுவின் ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சோமாலியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


