Monday, February 9, 2026 1:47 pm
பெண்கள், பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கைச் சேர்ந்த ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கனடா முழுவதும் பொது இடங்களில் பலமுறை மக்களை அச்சுறுத்தும் வகையில் காணொளி பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பொலிஸார் முகமது-ராசிக்கை சந்தேக நபராக அடையாளம் கண்டு கடந்த டிசம்பர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
டொராண்டோ பொலிஸார் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது.

