Friday, February 6, 2026 11:06 am
காலி – அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது.

