Friday, February 6, 2026 10:08 am
சாவகச்சேரி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அம்புலன்ஸ் வாகனம் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நாவற்குழிப் பகுதியை அம்புலன்ஸ் கடக்க முயன்ற வேளை வீதியின் குறுக்கே வந்த மாட்டுடன் எதிர்பாராத விதமாக மோதியது. இதன்போது வாகனத்தின் முன்பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தவிபத்தில் வாகனத்திலிருந்த நோயாளி, மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சாரதி ஆகியோருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து நோயாளி உடனடியாக மாற்று வாகனம் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

