Thursday, February 5, 2026 9:54 am
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

