Tuesday, February 3, 2026 2:47 pm
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்தப் பொறுப்பிலிருந்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்கட்சி கொள்கைகள் மற்றும் பொறுப்புத்தன்மை தொடர்பான முரண்பாடுகளின் பின்னணியில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசியல் யாப்புக் கவுன்சிலில் (Constitutional Council) இருந்து விலக மறுத்த சிறீதரனின் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு ஆதரவளித்ததாக தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
கட்சியின் நீண்ட கால நிலைப்பாடுகளுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் முரணாக செயற்பட்டதாக தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு குறிப்பிடுகின்றது.

