Friday, January 30, 2026 2:31 pm
திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக – காங்கிரஸ் பல ஆண்டுகளாக கூட்டணியால செயல்படுவதாக கூறிய கனிமொழி, திமுக கூட்டணியில் நிச்சயமாக புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று தனியார் விடுதியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக – காங்கிரஸ் கட்சிகள் நீண்ட ஆண்டுகளாக கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.
அதில் எந்த மோதல்போக்கும் இல்லை. அதேபோல் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளது. திமுக கூட்டணிக்கு வரும் புதிய கட்சிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக விரைவில் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

