Friday, January 30, 2026 10:40 am
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடிப்படைச் சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து 1550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அதன்படி இச்சம்பளத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

