Tuesday, January 27, 2026 12:19 pm
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.
194 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

