Friday, May 30, 2025 7:34 am
எண்டன பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரமுல, தெமுவத்த மயானத்தில் எரிந்த முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் ஒரு சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எண்டன பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தவர் ரில்ஹெனாவத்த பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து எண்டன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

