இலங்கை மீது அமெரிக்க அரசாங்கம் தற்போது விதித்த பரஸ்பர வரிகள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத் அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு நேற்று மாலை வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
அமெரிக்க ஏற்றுமதிகளை பரஸ்பரம் நடத்துவதன் அவசியத்தை தூதர் சுங் எடுத்துரைத்தார். நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தக உறவு இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்களை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் என்று வலியுறுத்தினார்.