Tuesday, November 3, 2026 4:57 pm
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சி கீழ் உள்ள செவிலியர் கல்லூரிகளில் மூன்றாண்டு உயர் பட்டயப் படிப்பை நிறைவுசெய்த, 2020 ஆம் ஆண்டு மாணவர் செவிலியர் தொகுதியைச் சேர்ந்த 2,819 பயிற்சி செவிலியர்களுக்கு, இலங்கை சுகாதார சேவையில் மூன்றாம் தர செவிலியர் அதிகாரிகளாக நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (01) காலைஅலரி மாளிகையில் நடைபெற்றது.நியமிக்கப்பட்ட 2,819 செவிலியர் அதிகாரிகள், 2019 , 2020 ஆம் ஆண்டுகளில் அறிவியல் , கணிதப் பிரிவுகளில் ஜி.சி.இ உயர்நிலைத் தேர்வை எழுதியிருந்தனர். அவர்கள் 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள 16 செவிலியர் கல்லூரிகளில் சேர்ந்து, மூன்றாண்டு உயர்நிலை பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியர் அதிகாரிகள், மத்திய அரசு , மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகள்,சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியமர்த்தப்படுவார்கள்.
76 முதலாம் நிலை செவிலியர் அதிகாரிகளுக்கு (மருத்துவமனை சேவைகள்) சிறப்பு நிலை செவிலியர் அதிகாரிகளாக (மருத்துவமனை சேவைகள்) பதவி உயர்வு வழங்குவதற்கான பதவி உயர்வுக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க,பல கூடுதல் செயலாளர்கள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் ,பிற அமைச்சு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

