Friday, October 16, 2026 4:04 pm
தென் அமெரிக்காவில் தொடக்க மூன்று போட்டிகள் நடைபெற்ற பிறகு, போத்துகல் , மொராக்கோ ஆகியவற்றுடன் இணைந்து ஸ்பெய்ன் நடத்தும் 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் அனைத்து 104 போட்டிகளையும் நேரலையில் ஒளிபரப்பவுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2030 உலகக் kiNNath தொடர் அதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அமைகிறது. இதைக் கொண்டாடும் விதமாக, 1930-ல் முதல் உலகக் கோப்பையை நடத்திய உருகுவே , ஆர்ஜென்ரீனா, பராகுவே ஆகிய நாடுகள் தலா ஒரு போட்டியை நடத்துகின்றன. அதன் பின்னர் முக்கியத் தொடர் தென் அமெரிக்காவிலிருந்து நகர்ந்து தெற்கு ஐரோப்பா,வட ஆப்பிரிக்கா ஆகியவற்றில் நடைபெறும்.
முன்னதாக, 2027, 2031 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள பெண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அமெரிக்க ஒளிபரப்பு உரிமையை 2024-ல் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றது

