Saturday, November 28, 2026 1:14 pm
1983-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘ கறுப்பு ஜூலை’ கலவரங்கள்,அதன் தாக்கம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக, 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு குறித்த அறிவிப்பை, பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று சனிக்கிழமை (28) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை, இந்தக் குழு பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

